சிறுகதை ஆசிரியர்கள்
சிறுகதை ஆசிரியர்கள்
புதுமைப்பித்தன்
§ புதுமைப்பித்தன்
என்ற புனைப்பெயரில் சிறுகதைகளை எழுதிய இவரது இயற்பெயர், சொ.விருத்தாசலம்.
§ புத்தம்புதிய
வடிவங்களையும் இலக்கிய உத்திகளையும் கையாண்டு புரட்சி நடையில் கதை எழுதியவர் புதுமைப்பித்தன்.
§ கேலியும்
கிண்டலும் நிறைந்த திருநெல்வேலி மாவட்டத்துத் தமிழ்வளமும் கூடிய இவரது கதைகள் பொருளற்ற
சமூகக் கட்டுப்பாடுகளையும், மூட நம்பிக்கைகளையும் கேள்விக்கு உட்படுத்துவதாக அமைந்திருக்கும்.
§ வறுமையின்
பின்னணியில் ஏற்படும் அவலங்களை மையமாகக் கொண்டு துன்பக்கேணி, பொன்னகரம் முதலான கதைகளை
இவர் படைத்துள்ளார்.
§ கடவுளையும்
மனிதனையும் கதாபாத்திரங்களாகக் கொண்டு படைக்கப்பட்ட கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்
கதையில் மனிதனின் விதியை அவன் படைத்த கடவுளாலும் மாற்றமுடியாது என்ற உண்மையைக் கூறியுள்ளார்.
§ உலகச்
சிறுகதை எழுத்தாளர்களோடு ஒப்ப வைத்து புகழ்வதற்குத் தகுதியுடைய இவர் உலகச் சிறுகதைகளை
மொழிபெயர்த்து, உலகத்துச் சிறுகதைகள், தெய்வம் கொடுத்த வரம் என்ற தலைப்புகளில் வெளியிட்டார்.
§ மணிக்கொடி
எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்க இவர் புராணக் கதாப்பாத்திரங்களை மறுவாசிப்பிற்கு உட்படுத்திப்
பல சிறுகதைகளை எழுதியுள்ளார் (சான்று: அகலிகை, சாபவிமோசனம்).
§ சிறுகதை
மன்னன், தமிழ்நாட்டின் மாப்பஸான் என்றெல்லாம் சிறப்பிக்கப்படுகின்ற புதுமைப்பித்தன்
குறித்து, ‘காவியத்துக்குக் கம்பன் கவிதைக்குப் பாரதி எனில் சிறுகதைக்குப் புதுமைப்பித்தன்’
என்று ஜெயகாந்தன் பாராட்டியுள்ளார்.
கு.ப.ராஜகோபாலன்
§ மணிக்கொடி காலச் சிறுகதை ஆசிரியர்களில் முக்கியமானவர் கு.ப.ரா.
§ 1902இல் கும்பகோணத்தில் பிறந்த இவர் தமிழ்ச் சிறுகதையின்
மறுமலர்ச்சிக்கு வித்திட்ட முக்கியமானவர்களில் ஒருவர்.
§ பெண்களின் உணர்வுகளை மிக நுட்பமாக எழுதியவர்.
§ விடியுமா, கனகாம்பரம், நூருன்னிஷா, காணாமலே காதல், காணாமலே
காதல், சிறிது வெளிச்சம் போன்ற இவரது கதைகள் மிகுந்த கவனத்திற்குள்ளாகின.
கு. அழகிரிசாமி
§ 1932இல் இடைச்செவல் என்ற கிராமத்தில் பிறந்தார்.
§ இசையில் மிகுந்த ஈடுபாடு கொண்ட இவர் முறையாக இசையைக் கற்றவர்.
§ ஒன்பது சிறுகதைத் தொகுதிகளையும் மூன்று இலக்கியக் கட்டுரைகளையும்
இவர் எழுதியுள்ளார்.
§ ‘அன்பளிப்பு’(1970) என்ற கதை தொகுப்புக்காக சாகித்திய அகாதெமி
விருதுபெற்றவர்
§ மக்களின் மொழியைச் சரளமாகவும், உணர்ச்சிப்பெருக்குடனும்
வெளிப்படுத்தியவர்.
§ இவரது
முக்கிய கதைகள்: இராஜா வந்திருக்கிறார்,
அன்பளிப்பு, இருவர் கண்ட ஒரே கனவு, தரிசனம், பாலம்மாள் கதை.
கி.ராஜநாராயணன்
§ கரிசல்
இலக்கியத்தின் பிதாமகர்; கோவில்பட்டி அருகில் உள்ள இடைச்செவல் கிராமத்தைச் சேர்ந்தவர்.
§ 1958இல்
சரஸ்வதி இதழில் இவரது முதல் கதை வெளியானது.
§ ‘கோபல்லபுரத்து
மக்கள்’(1991) என்ற நாவலுக்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றவர்
§ கி.ரா
என்று நண்பர்காளல் அழைக்கப்படும் இவர் ஒரு விவசாயி ஆவார்.
§ இவரின்
கதை உலகம் கரிசல் வட்டாரத்து மக்களின் நம்பிக்கைகளையும் ஏமாற்றங்களையும் வாழ்க்கைமுறைகளையும்
விவரிப்பதாக அமைந்துள்ளது.
§ கதவு,
அரும்பு, பேதை, கன்னிமை, நாற்காலிகள் போன்றவை இவரது முக்கிய கதைகள்.
ஜெயகாந்தன்
§ தமிழ் இலக்கியத்தின் தனிப்பெரும் சாதனையாளரும் ஞானபீடப்
பரிசு பெற்றவருமான ஜெயகாந்தன் இலக்கியம், அரசியல், பத்திரிக்கை, சினிமா என்று பல்வேறு
தளங்களில் இயங்கியவர்.
§ 1934ஆம் ஆண்டு கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பத்தில் பிறந்த
இவர் புதுமைப்பித்தனையும் பாரதியாரையும் தனது குருவாகக் கொண்டு எழுதத் தொடங்கியவர்
ஆவார்.
§ 1950 முதல் சரஸ்வதி இதழிலும் ஆனந்தவிகடனிலும் தொடர்ந்து
எழுதிவந்தார்.
§ கற்பு, ஒழுக்கம், கட்டுப்பாடு, பொது மரபு என்ற பெயரில்
அடக்கப்பட்ட பெண்களின் உரிமைகளுக்காகக் குரல்கொடுத்தவர்.
§ ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ (1972) என்ற நாவலுக்காக
இவருக்கு சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது.
§ யாருக்காக அழுதான், குருபீடம், அக்கினிப் பிரவேசம், விகாசம்,
ஒருபிடி சோறு ஆகியவை இவரது குறிப்பிடத்தக்க கதைகள் ஆகும்.
சுந்தர ராமசாமி
§ நவீன தமிழ் இலக்கியத்தின் அரிய சாதனையாளராகக் கொண்டாடப்படும் சுந்தர ராமசாமி.
சிறுகதை, கவிதை. நாவல், நாடகம், கட்டுரை என்று விரிந்த தளங்களில் இயங்கியவர்.
§ ‘சரஸ்வதி’ இதழின் வழியே எழுதத் துவங்கிய இவர், புதுமைப்பித்தன்மீது அதிக ஈடுபாடு
கொண்டவர்.
§ இவரது ‘பிரசாதம்’, ‘பல்லக்குத்தூக்கிகள்’, ‘பள்ளம்’ போன்றவை முக்கிய சுந்தர
ராமசாமி சிறுகதைத் தொகுப்புகள்.
§ ‘ஒரு புளியமரத்தின் கதை’, ‘ஜே.ஜே.சில குறிப்புகள்’, ‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’
என்ற இவரது மூன்று நாவல்களும் தமிழ் நாவல் உலகில் தீவிர வாசிப்புக்கும் கவனத்துக்கும்
உட்பட்டவை.
§ ‘பசுவய்யா’ என்ற பெயரில் கவிதைகள் எழுதி வந்தார். கவிதைக்கான ஆசான் விருது,
டொரான்டோ பல்கலைக்கழகத்தின் இயல் விருது உள்ளிட்ட பல முக்கிய விருதுகளைப் பெற்றவர்.
§ இவரது படைப்புகள் ஆங்கிலத்திலும் இந்தியிலும் வெளியாகி உள்ளன. கல்வித் துறை
சார்ந்த இவரது சிந்தனைகள் தனித்த நூலாக வெளிவந்துள்ளது.
அசோகமித்திரன்
§ அசோகமித்திரன் தமிழ் இலக்கியச் சாதனையாளர்களுள் ஒருவர்.
§ இவரது கதைகள் தமிழ் இலக்கியத்துக்கு உலக அளவில் அங்கீகாரம் பெற்றுத் தந்தன.
அமெரிக்க இலக்கியங்களைத் தமிழில் அறிமுகம் செய்த தனிப்பெருமை இவருக்கு உரியது.
§ ‘அப்பாவின் சினேகிதர்’ (1996) என்ற சிறுகதை தொகுப்புக்காக சாகித்திய அகாதெமி
பரிசு பெற்றவர்.
§ காத்திருத்தல், காட்சி, பறவை வேட்டை, காலமும் ஐந்து குழந்தைகளும், புலிக்கலைஞன்
ஆகியன இவரது கதைகளுள் சில ஆகும்.
பிரபஞ்சன்
§ சாகித்ய அகாடமி பரிசு பெற்ற பிரபஞ்சன், தமிழ் இலக்கியத்துக்கு வளமை சேர்த்து
வரும் முக்கியமான மூத்த படைப்பாளி.
§ 1945இல் பாண்டிச்சேரியில் பிறந்த இவரது இயற்பெயர் சாரங்கபாணி வைத்தியலிங்கம்.
பிரபஞ்சனின் கதை உலகம். அன்றாட மனிதர்களின் வாழ்க்கைப் போக்கைக் கூர்ந்து கவனித்து
எழுதப்பட்டது.
§ பிரபஞ்சன் சக மனிதர்களின் மீதான நேசமே வாழ்வை அர்த்தம் உள்ளதாக ஆக்குகிறது என்று
இவரது கதைகள் உரத்துச் சொல்கின்றன.
§ பிரபஞ்சன், கர்னாடக இசையிலிருந்து சம கால அரசியல் வரை எல்லாவற்றையும் கூர்ந்து
அவதானிப்பவர்; ரசிப்பவர்.
§ இலக்கிய சிந்தனை, பாஷாபரிஷத் விருது உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய விருதுகள்
பலவும் பெற்றுள்ள பிரபஞ்சனின் முக்கியப் படைப்புகள் ‘ஆண்களும் பெண்களும்’, ‘ஒரு ஊரில்
சில மனிதர்கள்’, ‘வானம் வசப்படும்’, ‘மகாநதி’ போன்றவை.
சோ. தர்மன்
§ சோ. தர்மன் (1953) என்பவர் தமிழகத்தைச் சேர்ந்த புனைதை எழுத்தாளர்.
§ கரிசல் மண் சார்ந்த வேளாண் மக்களின் வாழ்க்கையைப் பதிவு செய்யும் படைப்பாளிகளில்
முக்கியமானவர்.
§ கி. ராஜநாராயணனின் எழுத்துகளால் ஈர்க்கப்பட்டு எழுத்தாளராகப் பரிணமித்தவர்களில்
ஒருவர்.
§ ஈரம், சோகவனம், வனக்குமாரன், அன்பின் சிப்பி, நீர்ப்பழி ஆகிய சிறுகதைத் தொகுப்புகள்
வெளிவந்துள்ளன.
§ ‘சூல்’ என்ற நாவலுக்காக 2019ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி விருது பெற்றார்.
அம்பை
§ தமிழ்ச் சிறுகதை உலகின் தனித்துவமான எழுத்தாளர் அம்பை.
§ இவரது ‘சிறகுகள் முறியும்’ என்ற சிறுகதைத் தொகுப்பு இலக்கிச் சூழலில் மிகுந்த
கவனத்தையும் விவாதத்தையும் உருவாக்கியது.
§ தமிழ்க் கலாச்சாரச் சூழலில் பெண்களை நடத்தும் முறை பற்றிய கோபமும் எள்ளலும்
இவரின் எழுத்தின் வழியே வெளிப்பட்டன.
§ இவரின் கதைகள் ஆங்கிலம், இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல முக்கிய மொழிகளில் மொழியாக்கம்
செய்யப்பட்டுள்ளன.
§ சி.எஸ். இலட்சுமி என்ற இயற்பெயர் கொண்டவர்.
§ இவரது முக்கியமான கதைகள்: அம்மா ஒரு கொலை செய்தாள், வீட்டின் மூலையில் ஒரு சமையலறை,
காட்டில் ஒரு மான்.
§ ‘சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப்
பறவை’ (2021) என்ற சிறுகதைத் தொகுப்புக்காகச் சாகித்திய அகாதெமி விருது பெற்றவர்.
ச.தமிழ்செல்வன்
§ ச.தமிழ்செல்வன் கரிசல் வெக்கையைத் தனது எழுத்தில் பதிவு செய்த தனித்துவமான எழுத்தாளர்.
§ மிகக் குறைவான சிறுகதைகள் மட்டுமே எழுதியுள்ள
இவர், மக்கள் இயக்கங்களில் நேரடிப் பங்கு கொண்டு வருபவர்.
§ அறிவொளி இயக்கம், அறிவியல் இயக்கங்களின் வழியாக மக்களை விழிப்படையச் செய்யும்
தொடர்பணியை மேற்கொண்டு வருகிறார். இவரது ‘வெயிலோடு போய்’ என்ற சிறுகதைத் தொகுப்பு மிக
முக்கியமானது.
§ ‘வாளின் தனிமை’ என்றொரு சிறுகதைத் தொகுப்பும் வெளியாகியுள்ளது. ‘மிதமான காற்றும்
இசைவான கடலலையும்’ என்ற பெயரில் இவரது மொத்தக் கதைகள் தொகுக்கப்பட்டுள்ளன.
§ இவர், மதுரகவி பாஸ்கரதாஸின் பேரன். தபால் துறையில் பணியாற்றி விருப்ப ஓய்வு
பெற்ற தமிழ்செல்வன் நெல்லை மாவட்டம் பத்தமடையில் வசித்து வருகிறார்.
ஜெயமோகன்
§ சமகாலத் தமிழ் இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளியான ஜெயமோகன் ரப்பர், விஷ்ணுபுரம்,
பின்தொடரும் நிழலின் குரல், கன்னியாகுமரி, வெண்முரசு முதலான முக்கிய நாவல்களை எழுதியவர்.
§ தொன்மங்களின் மீதும் நாட்டார் மரபுகளின் மீதும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.
§ கதை, கட்டுரை, நாடகம், விமர்சனம், மொழிபெயர்ப்பு, சிறுவர் இலக்கியம் என்று பரந்த
தளங்களில் இயங்குபவர்.
§ திசைகளின் நடுவே, மண், ஆயிரங்கால் மண்டபம், கூந்தல், ஊமைச் செந்நாய், அறம்,
ஈராறுகால்கொண்டெழும் புரவி, வெண்கடல் உள்ளிட்ட சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன.
§ சங்கச் சித்திரங்கள், நாவல், நவீன தமிழிலக்கிய அறிமுகம், கண்ணீரைப் பின் தொடர்தல்
உள்ளிட்ட கட்டுரை நூல்களையும் எழுதியுள்ளார்.
பாவண்ணன்
§ தமிழ்ச் சிறுகதைகளில் தனித்துவமான கதை சொல்லும் முறை கொண்டவர்.
§ விழுப்புரத்துக்கு அருகில் பிறந்த இவர், தற்போது பெங்களூரில் வசிக்கிறார்.
§ கன்னட இலக்கியங்களைத் தமிழுக்கு மொழியாக்கம் செய்து. அதற்காக மொழி பெயர்ப்புக்கான
‘சாகித்ய அகாடமி’ விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
§ சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் என்று நீண்ட எழுத்து இயக்கம் கொண்டவர்.
§ இவரது ‘பாய்மரக் கப்பல்’ நாவல் குறிப்பிடத்தக்கதாகும்.
§ இணையத்திலும் சிறு பத்திரிகைகளிலும் தொடர்ந்து எழுதி வரும் பாவண்ணன், தொலைதொடர்புத்
துறையில் வேலை செய்து ஓய்வு பெற்றவர்.
எஸ்.
ராமகிருஷ்ணன்
§ எஸ்.ராமகிருஷ்ணன்,
(1966) தற்காலத் தமிழ் எழுத்தாளர்களுள் முக்கியமானவர்.
§ புதினங்கள்,
சிறுகதைகள், கட்டுரைகள், நாடகங்கள், குழந்தைகளுக்கான ஆக்கங்கள், திரைக்கதை, திரைப்பட
உரையாடல்கள் உள்ளிட்ட படைப்புச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதோடு, தனது உரைகள், பத்திகள்
மூலமாகச் சிறந்த இலக்கியங்கள், திரைப்படங்கள் ஆகியவற்றை அறிமுகப்படுத்தியும் வருகிறார்.
§ ‘சஞ்சாரம்’
என்னும் இவரது படைப்புக்கு 2018ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பெற்றது.
§ 1984-இல்
எழுதத் தொடங்கியவர். ஆனந்த விகடன் இதழில் இவர் எழுதிய துணையெழுத்து, கதாவிலாசம், தேசாந்திரி,
கேள்விக்குறி ஆகிய தொடர்கள் தீவிர இலக்கிய வட்டாரம் தாண்டி பரவலான வாசகப் பரப்பை இவருக்கு
ஈட்டித் தந்திருக்கின்றன.
§ ‘அட்சரம்’
என்ற இலக்கிய இதழின் ஆசிரியராக இருந்து எட்டு இதழ்கள் வரை வெளியிட்டிருக்கிறார்.
§ வெளியில்
ஒருவன், காட்டின் உருவம், நடந்துசெல்லும் நீரூற்று, பதினெட்டாம் நூற்றாண்டின் மழை,
அப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது, நகுலன் வீட்டில் யாருமில்லை, புத்தனாவது சுலபம்
உள்ளிட்ட சிறுகதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன.
Comments
Post a Comment