Posts

Showing posts from September, 2023
  பார்த்திபன் கனவு 1 கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களால் கல்கி இதழில் தொடராக வெளியிடப்பட்டு பின்பு புத்தககமாக வெளியிடப்பட்ட புதினம்    பார்த்திபன் கனவு.   இதில் நரசிம்மவர்மன், பரஞ்சோதி முனிவர், யுவாங் சுவாங் போன்ற வரலாற்று கதாபாத்திரங்களும் இடம்பெற்றுள்ளனர். இந்த கதையின் கருவாக இருப்பது தந்தையின் கனவை நிறைவேற்றுதல் மற்றும்   சில குறிப்புகளும் கதையில் கருவுடன் பயணிக்கின்றன அவை: §   தாய் நாட்டை மீட்டல் §   கொடுத்த வாக்கை   நிறைவேற்ற தவிக்கும் தாய் §   காதலியைக் கைப்பிடித்தல் §   மூடநம்பிக்கையும் போலி சாமியாரும் என பல சுவாரசியமான சம்பவங்களை கதையில் இணைத்துள்ளார் கல்கி. ஒரு காலத்தில் பேரரசாக விளங்கிய சோழப் பேரரசு பல்லவர்களுக்கு அடிமையான நாடாகிப் போனது. பல்லவர்களுக்கு கப்பம் கட்டும் சுதந்திரம் அற்ற ஒரு குறுநில அரசானது. சோழ அரசனான பார்த்திபன் தனது மகனான விக்கிரமனுக்கு சோழ அரசு மீளவும் தனது இழந்த புகழைப் பெற வேண்டும் என்று அறிவூட்டுகின்றான். பல்லவ மன்னனான நரசிம்மவர்மனுக்கு கப்பம் கட்ட மறுக்கும் பார்த்திபன், பல்லவ மன்னனை வீரத்துட...
 நன்னூல் - சொல்லதிகாரம் வினா வங்கி 2 மதிப்பெண் வினாக்கள் April 2012 1.   திசைச்சொல் குறிப்புத் தருக. 2.   பெயரெச்சம் என்றால் என்ன? 3.   ஆறாம் வேற்றுமையின் பொருண்மை யாது? 4. அறிவினா, அறியாவினா – விளக்குக. 5. பொருள்கோளின் வகைகள் யாவை? 6.   ‘முன்னத்தின் உணரும் கிளவியும் உளவே’ – விளக்குக. 7.   வினைமாற்று அசைப்பொருளில் வரும் இடைச்சொல் யாது? 8.   உரியியல் என்றால் என்ன? 9. ஐயறி உயிர் விளக்கம் தருக. 10. சொல்லதிகார இயல்களைக் கூறுக. April 2013 11. பால்பகா அஃறிணைப்பெயர் குறித்தெழுதுக. 12. வினையெச்ச வினைகள் பற்றிக் குறிப்பு எழுதுக. 13. இயல்பு வழக்கு பற்றி எழுதுக. 14.   ‘சொல் திரியினும் பொருள் திரியா வினைக்குறை’ – விளக்கம் தருக. 15.   திணை பால் வழுவமைதி – சான்றுடன் எழுதுக. 16.   உம்மைத் தொகை என்றால் என்ன? 17. உயிருள்ள பொருட்கள் யாவை? 18.   நான்கறி உயிர்கள் யாவை? சான்றுடன் எழுதுக. April 2014 19. இடுகுறிப்பெயர் – வரையறை செய்க. 20. முதல் வேற்றுமை யாது? விளக்குக. 21. ‘ஆக்க வினைக்குறிப்பு’ – விளக்குக. ...