சிறுகதை ஆசிரியர்கள்
சிறுகதை ஆசிரியர்கள் புதுமைப்பித்தன் § புதுமைப்பித்தன் என்ற புனைப்பெயரில் சிறுகதைகளை எழுதிய இவரது இயற்பெயர், சொ.விருத்தாசலம். § புத்தம்புதிய வடிவங்களையும் இலக்கிய உத்திகளையும் கையாண்டு புரட்சி நடையில் கதை எழுதியவர் புதுமைப்பித்தன். § கேலியும் கிண்டலும் நிறைந்த திருநெல்வேலி மாவட்டத்துத் தமிழ்வளமும் கூடிய இவரது கதைகள் பொருளற்ற சமூகக் கட்டுப்பாடுகளையும், மூட நம்பிக்கைகளையும் கேள்விக்கு உட்படுத்துவதாக அமைந்திருக்கும். § வறுமையின் பின்னணியில் ஏற்படும் அவலங்களை மையமாகக் கொண்டு துன்பக்கேணி, பொன்னகரம் முதலான கதைகளை இவர் படைத்துள்ளார். § கடவுளையும் மனிதனையும் கதாபாத்திரங்களாகக் கொண்டு படைக்கப்பட்ட கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும் கதையில் மனிதனின் விதியை அவன் படைத்த கடவுளாலும் மாற்றமுடியாது என்ற உண்மையைக் கூறியுள்ளார். § உலகச் சிறுகதை எழுத்தாளர்களோடு ஒப்ப வைத்து புகழ்வதற்குத் தகுதியுடைய இவர் உலகச் சிறுகதைகளை மொழிபெயர்த்து, உலகத்துச் சிறுகதைகள், தெய்வம் கொடுத்த வரம் என்ற தலைப்புகளில் வெளியிட்டார். § மணிக்கொடி எழுத்தாளர்களில் குறிப...