புதுக்கவிதை ஆசிரியர்கள் (எம்.ஏ. பாடத்திட்டம்)

 

                                புதுக்கவிதை ஆசிரியர்கள்

1. . பிச்சமூர்த்தி

§  இயற்பெயர், வேங்கட மகாலிங்கம்

§  கும்பகோணத்தைச் சேர்ந்தவர்

§  புதுக்கவிதையின் தந்தை என்று இவர் அழைக்கப்படுகிறார்.

படைப்புகள்

§  காட்டு வாத்து

§  வழித்துணை

§  கோடை வயல்

§  இராமானுஜர் திரைப்படத்தில்ஆளவந்தான்என்ற வேடத்தில் நடித்துள்ளார்.

2. பிரமிள்

§  இலங்கையைச் சார்ந்த கவிஞர்

§  இயற்பெயர் தருமு சிவராமு

§  பானு சந்திரன், அரூப் சிவராம் போன்ற புனைபெயர்களில் எழுதியுள்ளார்.

கவிதை நூல்கள்

§  கண்ணாடியுள்ளிருந்து

§  கைப்பிடி அளவு கடல்

§  மேல் நோக்கிய பயணம்

3. ஞானக்கூத்தன்

§  இயற்பெயர்: ரங்கநாதன்

§  நாகை மாவட்டத்தைச் சேர்ந்தவர்

§  கசடதபற, கவனம் போன்ற சிற்றிதழ்களை நடத்தியுள்ளார்

§  நவீன கவிஞர்

கவிதை நூல்கள்

§  அன்று வேறு கிழமை

§  சூரியனுக்குப் பின்பக்கம்

§  கடற்கரையில் சில மரங்கள்

§  மீண்டும் அவர்கள்

§  பென்சில் படங்கள்

§  என் வளம் என் நிற்றி  நீ

§  இம்பர் உலகம்

4. நா. காமராசன்

§  புதுக்கவிதையில் ஒரு பரபரப்பை ஏற்படுத்திய கவிஞர் இவர்.

§  ஆற்றல்மிக்க அழுத்தமான பல கவிதைகளை எழுதியுள்ளார்.

§  திரைப்பட பாடல்களும் எழுதியுள்ளார்.

§  சூரியகாந்தி, கறுப்பு மலர்கள், சகாராவைத் தாண்டாத ஒட்டகங்கள் முதலானவை இவரது முக்கியக் கவிதைத் தொகுப்புகளாகும்.

 

5. அப்துல் ரகுமான்

§  வானம்பாடி இயக்கக் கவிஞர்களுள் ஒருவர்

§  கவிக்கோபட்டம் பெற்றவர்

§  உவமை, படிமம், உருவகம், குறியீடு முதலியவற்றைக் கவிதைகளில் அதிகம் பயன்படுத்தியவர்.

§  புதுக்கவிதையில் குறியீடுஎன்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர்.

§  ஆலாபனைஎன்ற கவிதைத் தொகுப்பிற்காக 1999ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி விருது பெற்றவர்.

§  ஹைக்கூ, கஸல் போன்ற வடிவங்களை எழுதியவர்.

§  கலைமாமணி விருது பெற்றவர்

§  தமிழ்ப் பேராசிரியர்

கவிதை நூல்கள்

§  பால்வீதி

§  நேயர் விருப்பம்

§  சொந்தச் சிறைகள் (வசன கவிதை)

§  பித்தன்

§  மின்மினிகளால் ஒரு கடிதம்

§  இரகசிய பூ

§  முட்டை வாசிகள்

§  பறவையின் பாதை

§  தேவகானம்

§  கண்ணீர் துளிகளுக்கு முகவரி இல்லை

§  பாலை நிலா

§  இறந்ததால் பிறந்தவர்

6. மீரா

§  இயற்பெயர், மீ. இராஜேந்திரன்

§  சிவகங்கையைச் சார்ந்தவர்.

§  அன்னம் விடுதூது என்ற இதழை நடத்தினார்

கவிதைத் தொகுப்புகள்

§  மூன்றும் ஆறும்

§  மன்னர் நினைவில்

§  கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்

§  ஊசிகள்

§  கோடையும் வசந்தமும்

§  குக்கூ

7. இன்குலாப்

§  இயற்பெயர் சாகுல் அமீது

§  2017இல்காந்தல் நாட்கள்என்ற கவிதைத் தொகுப்பிற்காகச் சாகித்திய அகாதெமி விருது பெற்றார்.

§  புதுக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றியவர்

கவிதைத் தொகுப்புகள்

§  வெள்ளை இருட்டு

§  சூரியனைச் சுமப்பவர்கள்

§  கிழக்கும் பின் தொடரும்

§  கூக்குரல்

§  ஒவ்வொரு புல்லையும்

§  பொன்னிக் குருவி

§  புலி நகச் சுவடுகள்

§  ஒவ்வொரு பிள்ளையும் பெயர் சொல்லி அழைப்பேன் (மொத்த கவிதைகள்)

§  ஔவை, மணிமேகலை, குறிஞ்சிப்பாட்டு, குரல்கள், மீட்சி (நாடகங்கள்)

8. ஈரோடு தமிழன்பன்

§  இயற்பெயர், ஜெகதீசன்

§  2004இல்வணக்கம் வள்ளுவஎன்ற நூலுக்காகச் சாகித்திய அகாதெமி விருது பெற்றவர்.

§  வானம்பாடி கவிஞர்

§  சென்ரியூ, லிமரைக்கூ போன்ற கவிதை வடிவங்களைத் தமிழில் அறிமுகப்படுத்தியவர்.

கவிதைத் தொகுப்புகள்

§  சிலிர்ப்புகள்

§  தீவுகள் கரையேறுகின்றன

§  தோணி வருகிறது

§  அந்த நந்தனை எரித்த நெருப்பின் மிச்சம்

§  காலத்திற்கு ஒருநாள் முந்தி

§  ஊமை வெயில்

§  சூரியப் பிறைகள்

§  கண்ணுக்கு வெளியே சில கணங்கள்

§  என் வீட்டுக்கு எதிரே ஓர் எருக்கஞ் செடி

§  நடை மறந்த நதியும் திசை மாறிய ஓடமும்

§  உன் வீட்டிற்கு நான் வந்திருந்தேன் (வால்ட்விட்மன்)

§  சென்னிமலை கிளியோபாத்ராக்கள்

§  வார்த்தைகள் கேட்ட வரம்

§  இவர்களோடும் இவற்றோடும்

§  கனாக்காணும் வினாக்கள்

§  மின்னல் உறங்கும் போது

§  கதவைத் தட்டிய பழைய காதலி

§  விடியல் விழுதுகள்

§  கவிஞன் நூறு

§  ஓலைச்சுவடியும் குறுந்தகடும்

9. சிற்பி பாலசுப்பிரமணியம்

§  கவிஞர், மொழிபெயர்ப்பாளர், பேராசிரியர்.

§  பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியவர்

கவிதைத் தொகுப்புகள்

§  ஒரு கிராமத்து நதிநூலுக்காக 2002 இல் சாகித்திய அகாதெமி விருது பெற்றவர்

§  அக்னி சாட்சிஎன்ற நாவலை மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தமைக்காக மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாதெமி விருதை 2001இல் பெற்றவர்.

கவிதை நூல்கள்

§  நிலவுப் பூ

§  சிரித்த முத்துக்கள்

§  ஒளிப்பறவை

§  சர்ப்ப யாகம்

§  புன்னகை பூக்கும் பூனைகள்

§  மௌன மயக்கங்கள்

§  சூரிய நிழல்

§  இறகு

§  பூஜ்யங்களின் சங்கிலி

§  பெருமூச்சுக்களின் பள்ளத்தாக்கு

§  பாரதி கைதி எண் 253

§  மூடுபனி

§  தேவயானி

§  மகாத்மா

§  நீலக் குருவி

10. மு. மேத்தா

§  முகமது மேத்தா என்பது இவரது முழுப்பெயர்.

§  வானம்பாடிக் கவிஞர்

§  பெரிய குளத்தில் பிறந்தவர்

§  மாநிலக் கல்லூரியில் பேராசிரியராக இருந்தவர்

§  திரைப்படங்களுக்குப் பாடல்களும் எழுதியுள்ளார்

§  ஆகாசத்திற்கு அடுத்த வீடு (2006இல் சாகித்திய அகாதெமி விருது பெற்றது)

கவிதை நூல்கள்

§  கண்ணீர் பூக்கள்

§  மனச்சிறகு

§  ஊர்வலம்

§  திருவிழாவில் ஒரு தெருப் பாடகன்

§  நந்தவன நாட்கள்

§  வெளிச்சம் வெளியே இல்லை

§  ஒற்றைத் தீக்குச்சி

 

11. வைரமுத்து

§   தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள வடுகப்பட்டியில் பிறந்த வைரமுத்து புகழ்பெற்ற திரைப்படப் பாடலாசிரியர் ஆவார்.

§   தனது திரைப்படப் பாடல்களுக்காகப் பல தேசிய விருதுகளையும், மாநில விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.

§   திருத்தி எழுதிய தீர்ப்புகள், தமிழுக்கும் நிறம் உண்டு, கவிராஜன் கதை, கல்வெட்டுகள், கருவாச்சி காவியம், எனது பழைய பனைஓலைகள், வைகறை மேகங்கள், இதுவரை நான் (தன்வரலாறு), கொடிமரத்தின் வேர்கள், தண்ணீர் தேசம் ஆகியன இவரது நூல்களில் சில.

§   கள்ளிக்காட்டு இதிகாசம் என்ற நூலுக்காகச் சாகித்திய அகாதெமி விருதினை இவர் பெற்றுள்ளார்.

12. மனுஷ்ய புத்திரன்

§  இயற்பெயர் - எஸ்.அப்துல் ஹமீது

§  திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்

§  உயிர்மை என்ற இதழினையும் பதிப்பகத்தையும் நடத்தி வருகிறார்.

கவிதைத் தொகுப்புகள்

§  என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள்

§  இடமும் இருப்பும்

§  நீராலானது

§  மணலின் கதை

§  கடவுளுடன் பிரார்த்தித்தல்

§  அதீதத்தின் ருசி

§  இதற்கு முன்பும் இதற்கு பின்பும்

§  பசித்தபொழுது

§  சூரியனுக்கு அருகில் ஒரு வீடு

§  அருந்தப்படாத கோப்பை

§  தித்திக்காதே

§  புலரியின் முத்தங்கள்

13. சுகிர்த ராணி

§  வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

§  பெண்ணிய தலித் கவிஞர்

§  பள்ளி ஆசிரியராகப் பணியாற்றுகிறார்

கவிதைத் தொகுப்புகள்

§  கைப்பற்றிய என் கனவுகள்

§  இரவு மிருகம்

§  அவளை மொழிபெயர்த்தல்

§  தீண்டப்படாத முத்தம்

§  காமத்திப் பூ

§  நீர்வளர் ஆம்பல்

பாரதியார் (1882-1921)

§   இவர் 1882ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் பிறந்தார்.

§   இவரது பெற்றோர்: சின்னசாமி ஐயர் & இலக்குமி அம்மையார் ஆவர்

§   இயற்பெயர்: சுப்பிரமணியன்; இளமையிலேயே கவிபாடும் ஆற்றலின் காரணமாக ‘பாரதி’ என்ற பெற்றார்.

§   பாரதியார் தனக்கு முன்பிருந்த கவிஞர்களைப்போல் சொல் விளையாட்டில் ஈடுபடாமல் சமுதாயப் பார்வையோடு கவிதைகளை எழுதினார்.

§   சுதந்திர வேட்கை, பெண் விடுதலை, மொழிப்பற்று, நாட்டுப்பற்று உள்ளிட்டவை இவரது கவிதைகளில் பரவிக்கிடந்தது.

§   சுதேசமித்திரன் ஆசிரியர் குழுவில் பணியாற்றினார்; சக்ரவர்த்தினி, இந்தியா போன்ற இதழ்களையும் நடத்தினார்.

§   புதுக்கவிதையின் தொடக்கத்திற்கு இவர் எழுதிய வசனக்கவிதைகள் உதவின.

இவரது படைப்புகள்:

§  ஞானரதம்

§  கண்ணன் பாட்டு

§  குயில் பாட்டு

§  பாஞ்சாலி சபதம்

§  1921ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் நாள் காலமானார்.

பாரதிதாசன் (1891-1964)

§   பாரதிதாசன் 1891ஆம் ஆண்டு ஏப்ரல் 29ஆம் நாள் பாண்டிச்சேரியில் பிறந்தார்.

§   பெற்றோர்: கனகசபை முதலியார் - இலக்குமி அம்மாள்

§   இவருடைய இயற்பெயர் சுப்புரத்தினம். சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால் பாரதிதாசன் என்று தம் பெயரை மாற்றிக்கொண்டார்.

§   இவர் ‘குயில்’ என்னும் கவிதை வடிவில் ஒரு திங்களிதழை நடத்தி வந்தார்.

§   தமிழாசிரியராக பணியாற்றினார்.

§   தந்தை பெரியாரின் தீவிரத் தொண்டராகவும் விளங்கினார். மேலும் அவர் திராவிடர் இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டார். அதன் காரணமாக கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு, மத எதிர்ப்பு போன்றவற்றினை தனது பாடல்கள் மூலம் பதிவு செய்தார்.

§   பாரதிதாசன் அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராக 1954ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

§   1946 ஜூல 29இல் அறிஞர் அண்ணா அவர்களால் கவிஞர் ‘புரட்சிக்கவி’ என்று பாராட்டப்பட்டு ரூ.25, 000 வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

இவரது படைப்புகளில் சில:

§  அழகின் சிரிப்பு

§  குடும்ப விளக்கு

§  இருண்ட வீடு

§  பாண்டியன் பரிசு

§  இளைஞர் இலக்கியம்

§  இசையமுதம்

§   கவிஞர் 21.4.1964இல் இயற்கை மரணம் எய்தினார்.

தமிழ் ஒளி

§  குறிஞ்சிப்பாடியை அடுத்த ஆடூர் அகரம் என்னும் சிற்றூரில் சின்னையா - செங்கேணி அம்மாள் என்னும் இணையருக்குப் பிறந்தார்.

§  விசயரங்கம் என்பது தமிழ் ஒளியின் இயற்பெயர் ஆகும்.

§  பாரதியாரின் வழித் தோன்றலாகவும் பாரதிதாசனின் மாணவராகவும் விளங்கி கவிதைகளைப் படைத்தவர்.

§  கவிதைகள் மட்டுமல்லாது கதைகள், கட்டுரைகள், இலக்கியத் திறனாய்வுகள், மேடை நாடகங்கள், குழந்தைப் பாடல்கள் எனப் பல இயற்றியவர்.

§  முன்னணி, புதுமை இலக்கியம், சாட்டை போன்ற இதழ்களில் பணியாற்றினார். சனயுகம் என்னும் திங்கள் இதழைத் தம் சொந்த முயற்சியில் நடத்தி மார்க்கியக் கருத்துகளைப் பரப்பினார்.

§  தமிழ்ஒளி 1965 மார்ச் 29 அன்று பாண்டிச்சேரியில் தன் 41ஆம் அகவையில் காலமானார்

இவரது படைப்புகள்

§  கவிஞனின் காதல்

§  நிலை பெற்ற சிலை

§  வீராயி

§  மே தின ரோசா

§  விதியோ வீணையோ

§  கண்ணப்பன் கிளிகள்

§  கோசலக் குமாரி

§  மாதவிக் காவியம்

§  சிலப்பதிகாரம் காவியமா? நாடகமா?

§  திருக்குறளும் கடவுளும்

§  தமிழர் சமுதாயம்

இமையம்

§  கடலூர் மாவட்டத்தைச் சார்ந்தவர்; இயற்பெயர் வெ.அண்ணாமலை

§  பள்ளி ஆசிரியர், தலித் எழுத்தாளர்

§  இவரது ‘கோவேறு கழுதைகள்’, லட்சுமி ஹோம்ஸ்ரோம் என்பவரால், ‘Beasts of Burden’ என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

§  2018இல் இயல் விருது பெற்றவர்.

நாவல்கள்

§  கோவேறு கழுதைகள்

§  ஆறுமுகம்

§  செடல்

§  எங் கதெ

§  செல்லாத பணம் (2020இல் சாகித்திய அகாதெமி விருது பெற்ற நாவல்)

§  பெத்தவன் (குறுநாவல்)

§  வாழ்க வாழ்க (குறுநாவல்)

§  இப்போதும் உயிரோடுடன் இருக்கிறேன்

புதுக்கவிதை வகைகள்

ஐக்கூ: (துளிப்பா) ஜப்பான் நாட்டு சென் மதத்தினர் பாடிய ஹொக்கு என்ற ஒரு வகையே ஹைக்கு, ஐக்கூ என்று நாம் நாட்டிலும் பரவியது. இது மூன்று அடிகளால் பாடும் குறுங்கவிதையாகும். இதன் மூன்றாவது அடி, முதல் இரண்டு அடிகளின் பொருளை அதிரடியாகத் திசை திருப்பும்; சாட்டையடி போல் மனதை இறுக்கும். ஐக்கூ கவிதைகளுக்கு வயது வரம்பு இன்றி அனைத்துத் தரப்பினர்களிலும் வாசகர்கள் உண்டு. கவிதை ரசிகர்கள் என்ற சின்ன வட்டத்தையும் தாண்டி பரவலாக பலராலும் படிக்கப்படும் வடிவம்தான் ஐக்கூ.

ஜப்பானிய மொழியில் தோன்றிய ஐக்கூ, 5, 7, 5 என்னும் அசையமைப்புடையதாக, ஜென் தத்துவத்தை விளக்குவதற்கும் இயற்கையைப் போற்றுவதற்கும் பயன்பட்டது.

     உழுதுவந்த களைப்பில்

     படுக்கும் மாடுகள்

     காயம் தேடும் காக்கை

 

                        கல்லாகவே இருந்துவிடுகிறேன்

                        மிதித்து விடாதே

                        சுற்றிலும் இந்திரன்கள்

லிமெரிக்: ஆங்கிலத்தில் ஐந்து அடிகளில், யாப்பு முறையில் செய்யப்பட்ட கவிதையை லிமெரிக் என்று அழைப்பர். தாமசுமூர் என்பவரால் 18 ஆம் நூற்றாண்டில் அறிமுகம் செய்யப்பட்டது இக்கவிதை. பாலியல் சார்ந்த நிகழ்வுகளைக் கிண்டலாய் விரசமாய்க் கூறுவதே இக்கவிதையின் பண்பாகக் கொண்டனர். தமிழில் முதலில் இவ்வடிவத்தை ஈழத்து மகாகவி என்பவர் குறும்பா எனும் பெயரால் அறிமுகப்படுத்துகிறார். இவர் ஆங்கிலத்தில் உள்ள வடிவமைப்பையும் ஓசை ஒழங்கையும் பின்பற்றியுள்ளார். ‘குறும்பாவால் தமிழ்க்கவிதை நகைச்சுவை ஆழமும் அகலமும் இறுக்கமும் இலகுவும் பெற்று ஒரு புதிய உச்சத்தை அடைய வழிப்பிறக்கின்றது’ என்று எஸ்.பொன்னுதுரை குறிப்பிடுகிறார்.

            முத்தெடுக்க மூழ்குகின்றான் காலன்

            சத்தமின்றி வந்தவனின்

            கைத்தலத்தில் பத்து முத்தைப்

            பொத்தி வைத்தான் முச்சூலன்

            மகாகவியைத் தொடர்ந்து கோவேந்தன் என்பவரம் குறும்பாக்களைப் படைத்துள்ளார். இவர் வடிவமைப்பில் சில மாற்றம் செய்து ஆறடிக் குறும்பாக்களையும் எழுதியுள்ளார். தமிழ்க்கவிஞர்கள் ஐக்கூ, சென்ரியு எனும் இலக்கிய வகைமைகளில் ஆழ்ந்த கவனம் செலுத்தியது போல் குறும்பாக்களின் மீது கவனத்தைச் செலுத்தவில்லை என்றே கூறலாம்.

லிமரைக்கூ: (இயைபுத் துளிப்பா) மூன்றடிக் கவிதையில் முதலடியின் ஈற்றுச் சீரும் மூன்றாமடியின் ஈற்றுச் சீரும் இயைபுத்தொடையமையப் பாடப்படுவது இயைபுத் துளிப்பா அல்லது லிமரைக்கூ என்பர். இதன் இரண்டாமடி ஏனைய இரண்டடியையும் விட நீண்டிருத்தல் சிறப்பு. ஈரோடு தமிழன்பனின் சென்னிமலை கிளியோபாத்ராக்கள் என்னும் நூல் இத்தன்மைத்தாகும்.

            மணக்கும் மதுரைமல்லி

            வாங்கிப் போனான் காதலிக்கு

            மனைவி பேரைச் சொல்லி

 

            வறுமையால் கல்லைக்கட்டி

            விழுந்தப் பின் தெரிந்தது

            கிணற்றுக்குள் தங்கக்கட்டி

சென்ரியு: (நகைத் துளிப்பா) துளிப்பாவை அடுத்துச் சிறந்திருப்பது நகைத் துளிப்பாவாகும். ஜப்பானின் சென்ரியு என்னும் கவிதை வகையே தமிழில் இவ்வாறு அழைக்கப்படுகிறது. ஐக்கூவின் அங்கத வடிவம் சென்ரியு. ஐக்கூ இயற்கை உலகில் பார்வை செலுத்துகிறது எனில், மக்கள், பொருள், சம்பவங்கள் ஆகியவற்றின் மீதான பார்வையைக் குறிப்பது சென்ரியுவாகும். 5+7+5=17 என்னும் அசைகள் அமைப்போடு ஒழுங்கு வகைப்பட்டு ஒவ்வொரு கவிதையும் இருக்கும்.

தமிழில் ஹைகூ பரவிய அளவுக்கு சென்ரியு பரவவில்லை என்ற உண்மை ஒத்துக்கொள்ளப்பட வேண்டியதே. தனித்தனிக் கவிதைகளாகப் பலர் எழுதி வருகின்றனர். நூல் தொகுப்பாக வெளிவந்திருப்பது மிகச் சிலவே. 2001 ஆம் அண்டு கவிஞர் ஈரோடு தமிழன்பன் முழுக்க முழுக்க சென்ரியூ கவிதைகள் அடங்கிய தொகுப்பினை வெளியிட்டார். ஒரு வண்டி சென்ரியு என்னும் இந்நூலே தமிழில் முதல் சென்ரியு கவிதை நூலாகும்.

            சட்டம் ஒழுங்கைக்

            காப்பாற்ற முடியவில்லை

            சட்டசபையில்

 

            அது வராவிட்டால் இது

            இது வராவிட்டால் அது

            எதுவும் வராவிட்டால் அரசியல்

சானெட்: மேல்நாட்டுக் கவிதைகளில் சானெட் என்பது புகழ்மிக்க யாப்பு வகைக்கு உட்பட்ட கவிதையாகத் திகழ்கிறது. இதைப் பாரதி 1904&ல் சுதேசமித்திரன் இதழ்வழித் தமிழுக்கு அறிமுகப்படுத்துகிறார். பதினான்கு அடி எனும் வடிவ அமைப்பை மட்டுமே பின்பற்றி எழுதப்படும் இக்கவிதையைப் பரிதிமாற்கலைஞரும் ‘தனிப்பாசுரத்தொகை’ எனும் குறுநூலில் படைத்துள்ளார். பெ.தூரன் மின்னல் பூ எனும் கவிதைத் தொகுதியில் வடிவ மாற்றங்களுடன் சானெட் கவிதை படைத்துள்ளதையும் காணமுடிகிறது.

 

Comments

Popular posts from this blog

தமிழ்நாவல் தோற்றமும் வளர்ச்சியும்