புரட்சிக் கவி புரட்சிக் கவி என்னும் காப்பியத்தைப் பாரதிதாசன் 1937 ஆம் ஆண்டு வெளியிட்டார். வடமொழியில் எழுதப்பட்ட பில்கணீயம் என்னும் காவியக் கருத்தில் தமிழ் உணர்வு கொடுத்துப் ‘புரட்சிக் கவி’ என்னும் காப்பியமாகப் பாரதிதாசன் படைத்துள்ளார். மன்னன் ஒருவன் தனது மகள் அமுதவல்லி என்பவளுக்குத் தமிழ்க் கவிதை புனையும் ஆற்றலைக் கற்பிக்க விரும்பினான். அமுதவல்லிக்குத் தமிழ்க் கவிதை கற்பிக்கச் சிறந்தவன், உதாரன் என்பவன் ஆவான் என்று அமைச்சர் தெரிவித்தார். ஆனால் அவன் இளைஞன்; நல்ல அழகன் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார். மன்னனின் திட்டம் இளமை வாய்ந்த அமுதவல்லியும் இளைஞனான உதாரனும் நேரில் சந்திக்கக் கூடாது என்று மன்னன் கருதினான். எனவே, அமுதவல்லி தொழு நோயாளி என்று உதாரனிடம் தெரிவித்தான். உதாரன், குருடன் என்று அமுதவல்லியிடம் தெரிவித்தான். குருடனை நேரில் பார்ப்பது அபசகுனம். எனவே இருவருக்கும்...
Posts
Showing posts from October, 2023